Share On
ஆன்மீகம்

ஏகாதசி விரதத்தின் பின்னணியில் மறைந்துள்ள அறிவியல் ரகசியம்!

Admin 1 day ago 13
ஏகாதசி விரதம் இருந்து உடலை ஏன் வருத்திக்கணும் ஏகாதசிஅன்னைக்கு சாப்பிடாமல் இருந்த சாமிக்கு சந்தோஷம் வருமா" என்று இன்றைய இளம் தலை முறையினர் கிண்டலா கேட்பதுண்டு.
கடவுள் பெயரால் நம் முன்னோர்கள் வகுத்து வைத்த, இந்த ஏகாதசி விரதத்திற்கு பின், ஒரு மாபெரும் அறிவியல் ரகசியம் மறைத்திருக்கிறது.

கடந்த, 2016ல், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, யோஷினோரி ஓசுமி என்ற விஞ்ஞானிக்கு, நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர் கண்டுபிடித்த, மாபெரும் மருத்துவ உண்மையின் பெயர். 'ஆட்டோபேஜி!" இதற்கு, தன்னைத் தானே உண்ணுதல், என்று அர்த்தம்.

அதாவது ஒரு மனிதன் தொடர்ந்து, 14 முதல் 16 மணி நேரம் வரை எந்த உணவும் உட்கொள்ளாமல், உடலைப் பட்டினி போடும்போது, மனித உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்காமல் போகிறது. அப்போது, உயிர்வாழ்வதற்கான ஒரு போராட்டமாக, உடலுக்குள் இருக்கும் ஆரோக்கியமான செல்கள், அங்குள்ள கெட்டுப்போன, முதிர்ச்சியடைந்த மற்றும் புற்றுநோயை உருவாக்கக்கூடிய நச்சு செல்களை உணவாகத் தின்ன ஆரம்பிக்கின்றன.

இதனால், மனித உடலுக்குள் இருக்கும் ஒட்டுமொத்த கழிவுகளும், எந்த ஒரு மருத்துவ செலவும் இல்லாமல், தானாகவே சுத்தமாகி, உடல் முழுமையாக புத்துணர்ச்சி அடைகிறது. இது தான் அந்த, நோபல் பரிசு பெற்ற கண்டுபிடிப்பு.

ஆனால், இதை தான் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நம் சித்தர்கள்,
ஏகாதசி விரதம் என்ற பெயரில் நமக்கு கற்று கொடுத்து விட்டுப் போயுள்ளனர்.

எதற்காக, ஏகாதசி அன்று மட்டும் பட்டினி கிடக்க வேண்டும் வேறு நாளில் இருக்ககூடாதா? அங்கு தான் தமிழனின் பிரமாண்டமான வானியல் அறிவு வேலை செய்கிறது. அமாவாசை மற்றும் பவுர்ணமி முடிந்து வரும். 11வது நாள் தான் ஏகாதசி.

ஏகாதசி அன்று, பூமியின் வளிமண்டல அழுத்தம் மிக மிகக் குறைவாக இருக்கும். அந்த நாளில் உணவு உட்கொண்டால். செரிமானக் கோளாறுகள் ஏற்படும் என்பதையும், மூளையின் செயல்பாட்டை கூர்மையாக்க அதுவே சரியான நாள் என்பதையும் துல்லியமாக கணித்தனர்.

சாதாரண மக்களிடம் 'ஆட்டோபேஜி' என்றோ, 'செல் சுழற்சி' என்றோ விஞ்ஞானம் பேசினால், யாருக்கும் புரியாது என்பதால், அந்த மாபெரும் மருத்துவ அறிவியலை இறைவனோடு இணைத்து, விரதம் என்று வாழ்வியலாக மாற்றிக் கொடுத்துள்ளனர், நம் முன்னோர்.

இன்றைக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து, வெளிநாட்டவர்கள் கண்டுபிடிக்கும் விஷயங்களை நாம் என்றைக்கோ கண்டுபிடித்து விட்டோம். காலப் போக்கில், பழசு என்று துாக்கிப்போட்டு, அந்நியர்கள் சொல்வதை கேட்டு வருகிறோம்.

இனியாவது, ஏகாதசி விரதம் இருந்தால், முட்டாள் தனம் என்று சொல்லாதீர்கள்; அது, நோபல் பரிசு பெற காரணமான, தலைசிறந்த மருத்துவ சிகிச்சை முறை என்று உணர்ந்து செயல்படுவோம்|.
Share On

தூத்துக்குடி புகழ்பெற்ற இடங்கள்

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

எட்டயபுரம் அரண்மனை

SPICOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement