சென்னையில் “தமிழர் பண்பாடும் – இந்து மதமும்” என்ற தலைப்பிலான விநாயகர் சதுர்த்தி பாடல் வெளியீட்டு விழா, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், ஆன்மிகப் பாடகர் வீரமணி ராஜு, திரைப்பட இயக்குநர் மோகன் ஜி, திரைப்பட நடிகர் ரஞ்சித் மற்றும் திரைப்பட இயக்குநர் பேரரசு ஆகியோர் இணைந்து விநாயகர் சதுர்த்தி பாடலை வெளியிட்டனர்.
விழாவில் தாய்மார்கள், பெரியவர்கள், குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட இப்பாடல், தமிழர் பண்பாடு மற்றும் இந்து சமயத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.