Share On
தமிழ்நாடு செய்திகள்

சமூக மாற்றத்திற்கான போர்க்கருவியாக கவிதைகளைப் பயன்படுத்தியவர்!” மகாகவி பாரதியாரை நினைவுகூர்ந்த அண்ணாமலை

Admin 1 day ago

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவரைப் போற்றி பதிவிட்டுள்ளார்.


அவர் வெளியிட்ட பதிவில், பெண்கள் முன்னேற்றம், சகோதரத்துவம், சாதி வேற்றுமை ஒழிப்பு உள்ளிட்ட முற்போக்குச் சிந்தனைகளை தனது எழுத்துக்களின் மூலம் விதைத்தவர் பாரதியார் என்றும், தனது கவிதைகளை சமூக மாற்றத்திற்கான போர்க்கருவிகளாக மாற்றியவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழையும், தாய்நாட்டையும் உயிராகக் கொண்டு, எண்ணற்ற மக்களின் வாழ்க்கையில் ஒளிச்சுடராக விளங்கிய மகாகவி பாரதியாரின் காலத்தை வென்ற பாடல்கள் என்றும் நமக்கு உத்வேகம் அளிப்பவை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய உணர்வை விதைத்து, சமூகச் சீர்திருத்தத்திற்கான பாதையை அமைத்த மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் புகழைப் போற்றி வணங்குவதாகவும் தனது பதிவில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

Share On

உலக புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement