Share On
மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் பாரதியார், இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்: கீதாஜீவன் மலர்தூவி மரியாதை

Admin 1 day ago தூத்துக்குடி
 தூத்துக்குடியில் மகாகவி பாரதியாரின் 105-வது நினைவு தினம் மற்றும் தியாகி இம்மானுவேல் சேகரனின் 69-வது நினைவு தினத்தை முன்னிட்டு, திமுக வடக்கு மாவட்டம் சார்பில் அவர்களது திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மகாகவி பாரதியார் மற்றும் தியாகி இம்மானுவேல் சேகரன் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு, திமுக வடக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் மலர்தூவி மரியாதை செலுத்தி வணங்கினார்.

நிகழ்ச்சியில் மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை மேயர் ஜெனிட்டா, மாநகர துணைச் செயலாளர் கீதாமுருகேசன், மாவட்ட மற்றும் மாநகர நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மண்டல மற்றும் பகுதி செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், கவுன்சிலர்கள், வட்டச் செயலாளர்கள், வட்டப் பிரதிநிதிகள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் செய்திகள்

தூத்துக்குடியில் வஉசி பிறந்தநாளை யொட்டி 500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் ஸ்ரீநாத் வழங்கினாா்.

16 minutes ago

“கல்லாப்பெட்டி கூட்டணி” எனக் கையேந்தி வாக்கு கேட்டவர்கள்… இன்று அதே கூட்டணி தயவில் “சோபா மாடல்” ஆட்சி! – முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் காட்டம்

17 hours ago

தெய்வச்செயல்புரத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று மாவட்ட பா.ஜ.,வினர், கிராமமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத் துள்ளனர்.

2 days ago

அமைச்சர் பாதுகாப்புப் பணிக்குச் சென்ற ஆயுதப்படை காவலர் சாலை விபத்தில் உயிரிழப்பு!

3 days ago

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 35 குடிநீா் வழங்கும் நீர் தேக்க தொட்டிகளை கண்காணித்து வருகிறோம் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

4 days ago

தூத்துக்குடியில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி வேடமணிந்து சிறுவா்கள் முன்னாள் அமைச்சா் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றனா்.

6 days ago

Share On

உலக புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement