Share On
மாவட்ட செய்திகள்

தெய்வச்செயல்புரத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று மாவட்ட பா.ஜ.,வினர், கிராமமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத் துள்ளனர்.

Admin 2 days ago தூத்துக்குடி
துாத்துக் குடி வடக்கு மாவட்ட பா.ஜ., துணைத் தலை வரும், மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞருமான செந்தில்குமார் பிரபு தலைமையில் மாவட்ட அணி நிர்வாகிகள் முருகன், பேச்சி, சுரேஷ், வழக்கறிஞர் சுனில், சிலம்பரசன், பிரவீன், ராபின், ராகுல் மற்றும் அப்பகுதி கிராமமக்கள் கலெக் டர் விஷு மகாஜனிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

அம்மனுவில் கூறியிருப்பதாவது,

ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்குட்பட்ட தெய் வச்செயல்புரமானது நெல்லை - துாத்துக்குடி நான்கு வழிச்சாலை யில் வளர்ந்து வரும் நகர் பகுதியாக அமைந்துள்ளது.
இதனை சுற்றி ஏராளமான கிராமங்கள் அமைந்துள்ளன.

இப்பகுதி மக்கள் தங்களின் வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக தெய்வச்செயல்புரம் வந்து அங்கிருந்து நெல்லை, துாத்துக்குடி போன்ற பிறபகுதிகளுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

போக்குவரத்து நிறைந்த தெய்வச்செயல்புரத்தில் காவல் நிலையம் இல்லாதது பெரும் குறையாகவே இருந்து வருகிறது.இதனால்,
கொலை,கொள்ளை, திருட்டு போன்ற குற்றச்சம்பவங்கள் மற்றும் விபத்து, மறியல் போன்ற நிகழ்வுகளின் போது சுமார் 12 கிலோ மீட்டர் துாரத்திற்கு அப்பால் இருந்து போலீசார் வருவதற்கு மிகவும் தாமதமாகி  விடுகிறது.

எனவே, இது போன்ற குற்ற நிகழ்வுகளுக்கு தீர்வு காணும் வகையில் தெய்வச் செயல்புரத்தில் புதியதாக காவல் நிலையம் அமைக்கவேண்டும்.
மாலை முதல் இரவு வரையிலும் போலீசார் தெய்வச்செயல்புரம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் தடுத்து பாதுகாத்திட வேண்டும் என்று அதில் கூறியுள்ளார் 

மேலும் செய்திகள்

தூத்துக்குடியில் வஉசி பிறந்தநாளை யொட்டி 500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் ஸ்ரீநாத் வழங்கினாா்.

17 minutes ago

“கல்லாப்பெட்டி கூட்டணி” எனக் கையேந்தி வாக்கு கேட்டவர்கள்… இன்று அதே கூட்டணி தயவில் “சோபா மாடல்” ஆட்சி! – முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் காட்டம்

17 hours ago

தூத்துக்குடியில் பாரதியார், இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்: கீதாஜீவன் மலர்தூவி மரியாதை

1 day ago

அமைச்சர் பாதுகாப்புப் பணிக்குச் சென்ற ஆயுதப்படை காவலர் சாலை விபத்தில் உயிரிழப்பு!

3 days ago

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 35 குடிநீா் வழங்கும் நீர் தேக்க தொட்டிகளை கண்காணித்து வருகிறோம் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

4 days ago

தூத்துக்குடியில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி வேடமணிந்து சிறுவா்கள் முன்னாள் அமைச்சா் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றனா்.

6 days ago

Share On

உலக புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement