Share On
மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி–சென்னை வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வேண்டும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் சித்ராங்கதன் கோரிக்கை

Admin 2 weeks ago தூத்துக்குடி
திருச்செந்தூர் ரயில் நிலையத்தை அம்ரித் பரத் ரயில் நிலையமாக தரம் உயர்த்த மத்திய இணை அமைச்சர் முருகனிடம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதான் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுஅளித்தார்
தூத்துக்குடி மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம் மற்றும் ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் புதிய ரயில் சேவைகள், ஆறுமுகநேரி ரயில் நிலையத்தில் பிட் லைன் வசதி அமைத்தல், திருச்செந்தூருக்கு கூடுதல் ரயில்கள் இயக்குதல், சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலை திருச்செந்தூர் வரை நீட்டித்தல் மற்றும் தூத்துக்குடி–சென்னை வந்தே பாரத் ரயில் சேவையை விரைவில் தொடங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் சித்ராங்கதன், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகனிடம் மனு அளித்துள்ளார்.

  அந்த மனுவில், மத்திய அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கு பெரும் பங்காற்றி வருவதாகவும், விண்வெளி பூங்கா, கேந்திரிய வித்யாலயா பள்ளி, கப்பல் கட்டும் தளம் உள்ளிட்ட திட்டங்கள் மாவட்ட வளர்ச்சிக்கு புதிய உந்துதலை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூருக்கு இயக்கப்படும் ரயில்களின் பராமரிப்புப் பணிகளுக்காக அவற்றை திருநெல்வேலிக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை காரணமாக காலதாமதம் ஏற்படுவதாகவும், ஆறுமுகநேரி ரயில் நிலையத்தில் ஏற்கனவே போதிய தண்டவாள வசதி இருப்பதால் அங்கு பிட் லைன் அமைக்கப்பட்டால் ரயில்களை அங்கேயே பராமரிக்க முடிவதுடன், திருச்செந்தூருக்கு கூடுதல் ரயில் சேவைகளையும் இயக்குவதற்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருவதையும், சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் தென்மாவட்ட மக்களின் பயணத் தேவையையும் கருத்தில் கொண்டு, சென்னையிலிருந்து திருச்செந்தூருக்கு நேரடி புதிய ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தற்போது திருநெல்வேலி - மும்பை வரை இயக்கப்படும் சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலை திருச்செந்தூர் வரை நீட்டிக்க வேண்டும் என்றும், தூத்துக்குடி–சென்னை வந்தே பாரத் ரயில் சேவையை உடனடியாக தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.


தொழில் வளர்ச்சி, வணிக முன்னேற்றம், சுற்றுலா மேம்பாடு மற்றும் பொதுமக்களின் விரைவான போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு, இந்த கோரிக்கைகளை மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் எல். முருகனிடம் சித்ராங்கதன் கேட்டுக் கொண்டுள்ளார்.

 நிகழ்ச்சியில் வர்த்தக பிரிவு மாநில தலைவர் சதீஷ் ராஜா மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஆறுமுகம் செல்வராஜ் மாவட்ட துணை தலைவர் சிவராமன் திருச்செந்தூர் மண்டல் தலைவர் செல்வ குமரன் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

தூத்துக்குடி அருகே 200 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் கைது: தட்டப்பாறை போலீசார் நடவடிக்கை!!

5 days ago

தூத்துக்குடியில் ₹1,000-க்கும் மேற்பட்ட போலி இன்சூரன்ஸ் பாலிசி மோசடி: லாரி அதிபர்கள் உட்பட 4 பேர் கைது!

1 week ago

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி ரெய்டு! பொறியியல் பிரிவு அலுவலகம் சீல் வைத்து சோதனை

1 week ago

தூத்துக்குடி போக்சோ, கொலை வழக்குகளில் தண்டனை பெற்றுத் தந்த காவலர்களுக்கு டிஐஜி திருநாவுக்கரசு பாராட்டு

1 week ago

தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழகத்தில் 24 மணி நேரத்திற்கும் மேலாக பணி செய்ய நிர்பந்தம்!! 'சமூக வலைத்தளப் பதிவால் பரபரப்பு!!

1 week ago

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை முதல் கைபேசிக்கு முழுத் தடை! உயர்நீதிமன்ற உத்தரவு அமல்

1 week ago

Share On

உலக புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement