தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ செக்காரக்குடி பகுதியில், சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
தட்டப்பாறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் லதா வழக்குப்பதிவு செய்து மேற்க்கொண்ட நடவடிக்கையில், கீழ செக்காரக்குடியைச் சேர்ந்த சக்திவேல் மகன் முப்புலிங்கம் (23) கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்ததாகக் கூறப்படும் 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.