திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை W.P.(MD) No.25439/2022 பொதுநல வழக்கில் வழங்கிய உத்தரவின்படி, 14.11.2022 முதல் நடைமுறையில் உள்ள கைபேசி பயன்பாட்டுத் தடை, 01.07.2026 முதல் மேலும் தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது.
இதன்படி, பொதுதரிசனம், ரூ.100 விரைவு தரிசனம், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வரிசை உள்ளிட்ட அனைத்து நுழைவாயில்களிலும் பக்தர்கள் முழுமையான பாதுகாப்பு சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.
பக்தர்கள் தங்களது கைபேசிகளை தாங்கள் தங்கியிருக்கும் இடங்களிலோ அல்லது வாகனங்களிலோ பாதுகாப்பாக வைத்துவிட்டு கோயிலுக்கு வருமாறு கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், பக்தர்களின் வசதிக்காக கோயில் வளாகத்தின் பல்வேறு இடங்களில் Mobile Deposit Counters அமைக்கப்பட்டுள்ளன.
சோதனையின்போது கைபேசிகள் கண்டறியப்பட்டால், அவை பாதுகாப்பு நடைமுறைகளின்படி பெறப்பட்டு பாதுகாப்பு வைப்பகங்களில் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, 01.07.2026 முதல் திருக்கோயிலுக்குள் கைபேசி கொண்டு வராத நடைமுறைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு திருக்கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.